தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ 'இந்தியா 8% வளர்ச்சியை பெறும்'

 'இந்தியா 8% வளர்ச்சியை பெறும்'

 'இந்தியா 8% வளர்ச்சியை பெறும்'


ADDED : ஜூன் 08, 2026 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2026 06:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சங்களை தாண்டி, நாடு 8 சதவீத வளர்ச்சியை அடையும் என, உலக வங்கியின் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குநர் நீல்காந்த் மிஸ்ரா தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கம் குறித்து நிலவும் கருத்துகள் பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்டவையாக உள்ளன.

இந்திய எண்ணெய் விற்பனை நிறுவனங்கள், கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் நிறுவனங்களாகவும் இருப்பதால், டீசலின் சுத்திகரிப்பு லாப விகிதம் அதிகரிக்கும்போது நிறுவனங்கள் பலன் அடைகின்றன.

பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான சூழல் உள்நாட்டில் நிலவுகிறது. கார் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குறியீடுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. மேலும், கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் திறனில் இந்தியா வலுவான நிலையில் இருப்பதால், எண்ணெய் விலை உயர்வின் பாதிப்பை ஓரளவு குறைக்க முடிகிறது.

எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 -- 8 சதவீதம் அல்லது அதற்கும் மேலும் இருக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us