சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் ஒரே அளவில் விற்க வலியுறுத்தல்
சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் ஒரே அளவில் விற்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 05, 2026 03:08 AM

புதிய விதிமுறையை பரிசீலிக்கும் மத்திய அரசு
புதுடில்லி: சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளின் அளவுகளை மீண்டும் தரப்படுத்தும் விதிமுறைகளை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2023ல் விதிமுறைகள் தளர்வுக்கு பின், 180 மி.லி., 450 மி.லி., 950 மி.லி., போன்ற பல்வேறு அளவுகளில் பாக்கெட்டுகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரே மாதிரி தோற்றமளிக்கும் பாக்கெட்டுகளில் எண்ணெயின் அளவு மட்டும் மாறுபடுவதால், விலையை ஒப்பிடுவதில் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்படுவதாக தொழில்துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக நுகர்வோர் விவகாரத்துறை உடன் நடைபெற்ற ஆலோசனையில், தொழில்துறை அமைப்புகள் 200 மி.லி., 500 மி.லி., 1 லிட்டர், 2 லிட்டர், 5 லிட்டர் போன்ற நிலையான அளவுகளில் மட்டுமே சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
