/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
இந்திய பொருளாதார வளர்ச்சி வரி விதிப்பால் பாதிக்கப்படாது; பன்னாட்டு நிதியம் கணிப்பு

UPDATED : அக் 27, 2025 10:09 AM
ADDED : அக் 27, 2025 01:33 AM

புதுடில்லி: அமெரிக்க வரி விதிப்பால் இந்திய பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாது என்று பன்னாட்டு நிதியம் தெரிவித்துஉள்ளது.
சர்வதேச பொருளாதார கண்ணோட்டம் என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்பு 6.40 சதவீதத்திலிருந்து 6.60 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி 4.80 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி காரணமாகவே கணிப்பு உயர்த்தப்பட்டுள்ளது.
இது, அமெரிக்க வரி விதிப்பால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஈடு செய்துவிட்டது. வலுவான உள்நாட்டு நுகர்வு, தயாரிப்பு துறையின் வளர்ச்சி மற்றும் சேவைகள் துறை விரிவாக்கம் ஆகியவை இந்திய வளர்ச்சிக்கு பெரிதும் கைகொடுக்கும். வளர்ந்த நாடுகளை பொறுத்தவரை அமெரிக்கா மற்றும் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி முறையே 1.90 சதவீதமாகவும்; 1.10 சதவீதமாகவும் இருக்கும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.