/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஹைபிரிட் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு ஜனவரியில் ரூ.21,000 கோடியாக உயர்வு
/
ஹைபிரிட் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு ஜனவரியில் ரூ.21,000 கோடியாக உயர்வு
ஹைபிரிட் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு ஜனவரியில் ரூ.21,000 கோடியாக உயர்வு
ஹைபிரிட் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு ஜனவரியில் ரூ.21,000 கோடியாக உயர்வு
ADDED : பிப் 20, 2024 12:37 AM

புதுடில்லி:ஹைபிரிட் மியூச்சுவல் பண்டுகள், கடந்த ஜனவரியில் 20,634 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளதாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சங்கமான 'ஆம்பி' தரவுகள் தெரிவிக்கின்றன.
ஹைபிரிட் மியூச்சுவல் பண்டுகள் முதலீட்டாளர்களிடையே அண்மைக் காலமாக மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. அதனடிப்படையில் கடந்த ஜனவரி மாதத்தில் 20,634 கோடி ரூபாய் முதலீட்டை இந்த பண்டுகள் பெற்றுள்ளன. இது முந்தைய மாதத்தை விட 37 சதவீதம் உயர்வாகும்.
இதைத் தொடர்ந்து, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜனவரி காலகட்டத்தில், இந்த மியூச்சுவல் பண்டுகளின் மொத்த வரவு 1.21 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
கடன் பண்டுகள் மீதான வரி விதிப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு பின், கடந்த 2023 ஏப்ரல் முதல் ஹைபிரிட் மியூச்சுவல் பண்டுகளில் அதிகளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஹைபிரிட் பண்டுகள் மியூச்சுவல் பண்டு திட்டங்களில் ஒன்றாகும். இவை பங்குகள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றின் கலப்பில் முதலீடு செய்யப்படுகின்றன. சில திட்டங்களில் தங்கத்திலும் சேர்த்து முதலீடுகள் மேற்கொள்ளப்படும்.
ஹைபிரிட் மியூச்சுவல் பண்டுகள் மிதமான அல்லது குறைந்த அபாயம் கொண்டவை என்பதால் முதலீட்டாளர்களால் அதிகம் விரும்பப்படுகின்றன.
இந்த நிதிகள் பங்கு சந்தையில் பங்கு பெறும்போது ஏற்படும் ஏற்ற, இறக்கங்களை குறைக்கின்றன. அதேநேரத்தில் நிலையான வருமான சந்தையில் ஸ்திரத்தன்மையுடன் இருக்கின்றன. இதுவே முதலீட்டாளர்கள் இதில் அதிகம் முதலீடு செய்ய காரணமாக உள்ளது.

