sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

தரவுகளுக்காக தவமிருக்கும் முதலீட்டாளர்கள்

/

தரவுகளுக்காக தவமிருக்கும் முதலீட்டாளர்கள்

தரவுகளுக்காக தவமிருக்கும் முதலீட்டாளர்கள்

தரவுகளுக்காக தவமிருக்கும் முதலீட்டாளர்கள்


ADDED : டிச 12, 2024 01:27 AM

Google News

ADDED : டிச 12, 2024 01:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

• வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் சிறிய ஏற்றத்துடன் நிறைவடைந்தன

• உலகளாவிய சந்தை போக்குகளுக்கு மாறாக, ஆசிய சந்தைகளின் தொடர்ச்சியாக நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோது, இந்திய சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் துவங்கின.

• கடந்த நவம்பர் மாதத்திற்கான சில்லரை பணவீக்கம் தொடர்பாக தரவுகள் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், நேற்றைய வர்த்தகத்தின் போது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் மிகவும் நிதானம் காட்டினர். இதனால், சந்தை குறியீடுகள் இரண்டாவது நாளாக சிறிய உயர்வுடன் முடிவடைந்தன

• நிப்டி குறியீட்டில் நுகர்பொருட்கள், வாகனம் மற்றும் ஐ.டி., ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகள் சார்ந்த நிறுவனங்களின் குறியீடுகள் ஓரளவு உயர்வு கண்டன. பொதுத்துறை வங்கி, ஊடகம், எனர்ஜி, வங்கி துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடுகள் இறக்கம் கண்டன.

• மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 2,144 நிறுவன பங்குகள் உயர்ந்தும்; 1,839 நிறுவன பங்குகள் குறைந்தும்; 113 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று ---1,012 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.98 சதவீதம் அதிகரித்து, 72.90 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா அதிகரித்து, 84.84 ரூபாயாக இருந்தது.

டாப் 5 நிப்டி 50 பங்குகள்

அதிக ஏற்றம் கண்டவை

 டிரென்ட்

 பஜாஜ் பைனான்ஸ்

 பிரிட்டானியா

 ஸ்ரீராம் பைனான்ஸ்

 ஹீரோ மோட்டோகார்ப்

அதிக இறக்கம் கண்டவை

 ஜே.எஸ்.டபிள்யு ஸ்டீல்

 அதானி போர்ட்ஸ்

 என்.டி.பி.சி.,

 எஸ்.பி.ஐ.,

 ஆக்ஸிஸ் வங்கி






      Dinamalar
      Follow us