ADDED : ஜன 21, 2025 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், பங்கு தரகு வணிகத்தில் இறங்கியுள்ளது. இதற்காக 'ஜியோ பிளாக்ராக் புரோக்கிங்' என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளது.
எனினும் இதற்கு இன்னும் ஒழுங்குமுறை ஒப்புதல்கள் பெறப்படவில்லை. ஜியோ பைனான்சியல் சர்வீசஸின் கூட்டு நிறுவனமான ஜியோ பிளாக்ராக் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்சின் துணை நிறுவனமாக இது துவங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாக்ராக் நிறுவனத்துடன் இணைந்து முதற்கட்டமாக தலா 3 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக கடந்தாண்டு செப்டம்பரில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஜியோ காய்ன் என்ற பெயரில் கிரிப்டோ கரன்சி வணிகத்திலும் ரிலையன்ஸ் நிறுவனம் இறங்க இருப்பதாக தெரிவித்த நிலையில், தற்போது பங்குத் தரகு தொழிலிலும் கால்பதிக்க திட்டமிட்டுள்ளது.