/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஜூலை கார் விற்பனை 2.60 சதவீதம் உயர்வு
/
ஜூலை கார் விற்பனை 2.60 சதவீதம் உயர்வு
UPDATED : ஆக 03, 2025 06:29 AM
ADDED : ஆக 03, 2025 02:07 AM

சென்னை: ஜூலை மாத பயணியர் கார் விற்பனை, 2.60 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில், 3.30 லட்சம் கார்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு ஜூலையில் 8 லட்சம் கார்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மஹிந்திரா நிறுவனம், ஹூண்டாய் மற்றும் டாடா நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடத்தில் தனது இருப்பை வலிமைப்படுத்தி விட்டது. இந்நிறுவனத்தின் விற்பனை, 20 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.
ஹூண்டாய் மற்றும் டாடா நிறுவனங்களின் கார் விற்பனை, தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. சராசரியாக 11 சதவீதம் அளவுக்கு இவை விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளன. நாட்டின் முன்னணி கார் உற்பத்தியாளரான, மாருதி நிறுவனத்தின் விற்பனையில் பெரிய மாற்றம் இல்லை.
வாகன பதிவேடு தரவுகளின் படி, கடந்த மாதத்தில், அதிகம் பதிவான கார்களில், மாருதி டிசையர் முதல் இடத்தில் உள்ளது. அதிகபட்சமாக, ஸ்கோடா நிறுவனத்தின் விற்பனை, 163 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின், கைலாக் எஸ்.யூ.வி., கார் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
வின்சர் மின்சார காரின் விற்பனை தொடர்ந்து அதிகரிப்பதால், எம்.ஜி., நிறுவனத்தின் விற்பனை, 46 சதவீதத்திற்கு உயர்ந்து உள்ளது. டொயோட்டா நிறுவனம், 10 சதவீதமும், கியா நிறுவனம், 8 சதவீதமும், விற்பனை வளர்ச்சி கண்டுள்ளன.

