/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
குஜராத்தில் ஆலை அமைக்குமாறு நிறுவனங்களை மிரட்டுகிறார்கள்: கர்நாடக அமைச்சர் குற்றச்சாட்டு

ADDED : செப் 25, 2024 02:37 AM

புதுடில்லி:குஜராத்தில் முதலீடு செய்து ஆலை அமைக்குமாறு செமிகண்டக்டர் நிறுவனங்கள் மிரட்டப்படுவதாக, கர்நாடக தகவல் தொழில்நுட்பத் தறை அமைச்சர் பிரியங்க் கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.
டில்லியில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில், மாநிலங்கள் இடையே சமமான போட்டி வாய்ப்பு நிலை இல்லை. செமிகண்டக்டர் நிறுவனங்கள் ஆலை அமைக்க, கர்நாடகாவும், தமிழகமும் சாதகமான மாநிலங்களாக உள்ளன. ஆனால், எந்த நிறுவனமும் இந்த இரண்டு மாநிலங்களுக்கு வரவில்லை.
குஜராத்தில் முதலீடு செய்யுமாறு நிறுவனங்கள் மிரட்டப்படுவதாக, வெளிப்படையாக குற்றஞ்சாட்டுகிறேன்.
உள்நாட்டுக்கு மட்டுமின்றி; உலகளாவிய தேவையை நிறைவு செய்யும் அளவுக்கு, தொழில் கொள்கைகளும் துடிப்பான சூழலும் கர்நாடகாவில் உள்ளன.
செமி கண்டக்டர்களுக்கான திறனும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களும் சிறப்பாக இருக்கும் நிலையில், நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்யாதது ஏன் என, மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
செமிகண்டக்டர் ஆலை அமைக்க சாதகமான மாநிலங்களாக கர்நாடகாவும், தமிழகமும் உள்ளபோதிலும், எந்த நிறுவனமும் இங்கு வரவில்லை.