ADDED : டிச 18, 2024 02:14 AM

• வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவடைந்தன. நிப்டி, சென்செக்ஸ் தலா 1.4 சதவீதம் சரிவுடன் முடிவடைந்தன
• அமெரிக்க மத்திய வங்கியின் பணக்கொள்கை கூட்டத்தின் முடிவுகள் இன்று இரவு வெளியாக உள்ள நிலையில், உலகளாவிய சந்தை போக்குகள் இரண்டாவது நாளாக இறக்கம் கண்டன.
• இதன் தொடர்ச்சியாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோதே, இந்திய சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் துவங்கின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்து, லாபத்தை பதிவு செய்ததால், சந்தை மேலும் சரிந்தது
• நிப்டி குறியீட்டில், ஊடகம் தவிர அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடுகள் இறக்கம் கண்டன. அதிகபட்சமாக, பொதுத்துறை வங்கிகள், உலோகம், எனர்ஜி, எண்ணெய் மற்றும் எரிவாயு துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடு கிட்டத்தட்ட 2 சதவீதம் சரிவை கண்டன
• நேற்றைய சரிவால், முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 4.92 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர். மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 455 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 6,410 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று ஒரு பேரலுக்கு 0.50- சதவீதம் குறைந்து, 73.58 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றம் இன்றி 84.91 ரூபாயாக இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
சிப்லா
ஐ.டி.சி.,
அதிக இறக்கம் கண்டவை
ஸ்ரீராம் பைனான்ஸ்
கிராசிம்
ஹீரோ மோட்டோகார்ப்
பார்தி ஏர்டெல்
ஜே.எஸ்.டபிள்யு., ஸ்டீல்