/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பி.எம்.ஐ., குறியீடு 10 மாத உச்சத்தை எட்டிய தயாரிப்பு துறை: எச்.எஸ்.பி.சி., வங்கி ஆய்வு

ADDED : மே 02, 2025 09:07 PM

புதுடில்லி:நாட்டின் தயாரிப்பு துறை வளர்ச்சி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 10 மாத உச்சத்தை எட்டியுள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கியின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி ஆர்டர்கள், கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின் ஒவ்வொரு மாத தயாரிப்பு நிலவரம் குறித்து, எச்.எஸ்.பி.சி., வங்கி ஆய்வு நடத்தி, பி.எம்.ஐ., குறியீடாக வெளியிட்டு வருகிறது. 'எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா' எனும் நிறுவனம், இதற்கான தரவுகளை திரட்டி தருகிறது.
பி.எம்.ஐ., குறியீடு, கடந்த மார்ச் மாதத்தில் 58.10 புள்ளிகளாக இருந்த நிலையில், ஏப்ரலில் 58.20 புள்ளிகள் என்ற 10 மாத உச்சத்தை எட்டியுள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு இதுவே அதிகபட்ச வளர்ச்சியாகும்.
இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். குறைவாக இருந்தால் சரிவைக் குறிக்கும்.
முக்கிய அம்சங்கள்
வலுவான தேவை நிலவியதால், புதிய வணிகங்கள் அதிகரித்தன
வெளிநாட்டு ஆர்டர்கள் 14 ஆண்டுகளில் இல்லாத அதிகரிப்பு
ஆர்டர்கள் அதிகரிப்பால் பணியமர்த்தல் மற்றும் கொள்முதலும் அதிகரித்தன
அமெரிக்க வரி பிரச்னைக்கு ஏற்றாற்போல் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன
தேவை உயர்வால் நிறுவனங்கள் விலையை அதிகரித்து, நல்ல லாபம் ஈட்டின.