/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஸ்டார்ட்அப் வளர மாருதி, ஜெட்ரோ ஒப்பந்தம்
/
ஸ்டார்ட்அப் வளர மாருதி, ஜெட்ரோ ஒப்பந்தம்
ADDED : மே 29, 2025 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:இந்தியா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்புகளை பரஸ்பரம் வழங்க, மாருதி சுசூகி இந்தியா மற்றும் ஜப்பான் அன்னிய வர்த்தக அமைப்பான ஜெட்ரோ ஆகியவை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் வாயிலாக, ஜப்பானின் புதுமை கண்டுபிடிப்பு நடைமுறைகளை இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அறியவும், இந்திய நடைமுறைகளை ஜப்பானிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அறியவும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
மேலும், இரு நாடுகளின் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ச்சி காண வழியேற்படும் என்றும் ெதரிவிக்கப்பட்டுள்ளது.