/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்க அதிக நிறுவனங்கள் வரவுள்ளன'
/
'ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்க அதிக நிறுவனங்கள் வரவுள்ளன'
'ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்க அதிக நிறுவனங்கள் வரவுள்ளன'
'ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்க அதிக நிறுவனங்கள் வரவுள்ளன'
ADDED : ஜூலை 28, 2025 11:00 PM

சென்னை, :''ஆப்பிள் உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் ஏற்கனவே இருப்பதுடன், இன்னும் அதிக நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வரவுள்ளன,'' என, அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
தமிழகத்தின் சிறந்த உள்கட்டமைப்பு, திறமையான மனிதவளம், சிறந்த நிர்வாகம் ஆகியவை காரணமாக, ஐபோன்களை உற்பத்தி செய்யும், 'ஆப்பிள்' நிறுவனத்தின் உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் துவங்கியுள்ளன.
ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய உதிரிபாகங்களை தயாரிப்பதில் உலகளாவிய நிறுவனமான, 'பாக்ஸ்கானின்' ஆலை தமிழகத்தில் உள்ளது. இந்நிறுவனம், ஐபோன்களை உற்பத்தி செய்து, அமெரிக்கா உள்ளி ட்ட நாடுகளுக்கு ஏற்று மதி செய்கிறது. பாக்ஸ்கானை தவிர, டாடா எலக்ட்ரானிக்ஸ், பெகட்ரான் போன்ற உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களும் தமிழகத்தில் உள்ளன.
ஆப்பிள் நிறுவனத்திற்கு, இந்திய உற்பத்தி வினியோக தொடருக்கு, தமிழகம் முக் கிய மையமாக உருவெடுத் துள்ளது. எனவே, இன்னும் அதிகமான ஆப்பிள் நிறுவ னத்தின் சப்ளையர்கள் தமி ழகத்தில் முதலீடு செய்ய உள்ளனர். இதற்காக, அந்நிறுவனங்கள் தொடர்பு கொண்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறி னார்.