தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ நிலக்கரிக்கு தனி எக்ஸ்சேஞ் தேசிய பங்குச்சந்தை ஒப்புதல்

 நிலக்கரிக்கு தனி எக்ஸ்சேஞ் தேசிய பங்குச்சந்தை ஒப்புதல்

 நிலக்கரிக்கு தனி எக்ஸ்சேஞ் தேசிய பங்குச்சந்தை ஒப்புதல்


ADDED : பிப் 08, 2026 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 01:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய அளவிலான நிலக்கரி வர்த்தகத்துக்கு என பிரத்யேகமாக புதிய பிரிவு ஒன்றை துவங்க தேசிய பங்குச்சந்தை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக உரிமம் கோரி இந்திய நிலக்கரி கட்டுப்பாட்டு அமைப்பிடம் விரைவில் விண்ணப்பிக்க உள்ளதாகவும் கூறியுள்ளது.

தற்போது நிலக்கரி விற்பனையில் முறையான சந்தை இல்லாததால், விலையில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. இதன்காரணமாக, சிறு நிறுவனங்கள் நிலக்கரி பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

எனவே தான், நிலக்கரி விற்பனைக்கு என தனி வர்த்தக தளத்தை உருவாக்க, மத்திய அரசு கடந்த ஆண்டே திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், தேசிய பங்குச்சந்தை துவங்க உள்ள இந்த தளம் வாயிலாக, பண்டக சந்தையில் பல பொருள்கள் வர்த்தகம் ஆவது போல, நிலக்கரி வர்த்தகம் நடைபெறும். அதை முதலீட்டாளர்கள் மின்னணு முறையில் வெளிப்படையாக வாங்கவும், விற்கவும் முடியும்.

இந்த எக்ஸ்சேஞ்சில் தேசிய பங்குச்சந்தை 60 சதவீத பங்குகளை கொண்டிருக்கும் என்றும், மீதமுள்ள 40 சதவீதம் பங்குதாரர்கள் வசம் இருக்கும் எனவும் கூறியுள்ளது. ஆரம்பத்தில் நேரடி நிலக்கரி வினியோகமும், பின்னாளில் பங்குச்சந்தை போன்ற, 'டெரிவேட்டிவ்' வர்த்தகமும் அறிமுகமாகும் எனவும் தேசிய பங்குச்சந்தை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us