sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

அஞ்சலக திட்டங்களுக்கு புதிய விதிமுறைகள்

/

அஞ்சலக திட்டங்களுக்கு புதிய விதிமுறைகள்

அஞ்சலக திட்டங்களுக்கு புதிய விதிமுறைகள்

அஞ்சலக திட்டங்களுக்கு புதிய விதிமுறைகள்


ADDED : ஜூலை 20, 2025 08:44 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 08:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அஞ்சலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் சிறு சேமிப்பு திட்டங்கள் தொடர்பான புதிய விதிமுறைகளை அஞ்சலகத்துறை அறிவித்துள்ளது. இதன் படி, முதிர்ச்சி அடைந்த கணக்குகள் மூன்று ஆண்டுகளுக்குள் மூடப்படாவிட்டால் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர வருமானம் திட்டம், மூத்த குடிமகன்கள் திட்டம், வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ், பி.பி.எப்., ஆகிய திட்டங்களுக்கு இந்த விதி பொருந்தும். ஆண்டுக்கு இரு முறை கணக்குகள் சரி பார்க்கப்பட்டு, உரிய காலத்தில் மூடப்படாதவை முடக்கப்படும்.

முடக்கப்படும் கணக்குகளில் பணம் செலுத்த அல்லது புதிதாக பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியாது. பணத்தை விலக்கி கொள்ளவும் முடியாது. இணையம் வழியே இயக்கவும் முடியாது. மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு இவை செயல்படாத கணக்காக கருதப்படும்.

முடக்கப்பட்ட கணக்குகளை விடுவிக்க அஞ்சலகத்திற்கு சென்று, ஆதார், பாஸ்புக் அல்லது கணக்கு முடக்கப்பட்டதற்கான சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். உரிய ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு, முதலீட்டாளர் அடையாளம் உறுதி செய்யப்பட்ட பின், கணக்கில் உள்ள தொகை தொடர்புடைய சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும்.






      Dinamalar
      Follow us