ADDED : மார் 01, 2024 09:49 PM

கடந்த 1999ம் ஆண்டு துவங்கப்பட்ட 'கோபால் ஸ்நாக்ஸ்' இந்திய மற்றும் மேற்கத்திய வகை தின்பண்டங்களை தயாரித்து வழங்கும் ஒரு எப்.எம்.சி.ஜி., நிறுவனமாகும். குஜராத்தில் இரண்டு, மஹாராஷ்டிராவில் ஒன்று என, மொத்தம் மூன்று உற்பத்தி ஆலைகளை நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, 10 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் என, 500க்கும் மேற்பட்ட இடங்களில் அதன் தயாரிப்புகளை நிறுவனம் வழங்கி உள்ளது.
நிதி நிலவரம்
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வருவாய் 678 கோடி ரூபாய்; வரிக்கு பிந்தைய லாபம் 55 கோடி ரூபாய்.
துவங்கும் நாள் : 06.03.24
முடியும் நாள் : 11.03.24
பட்டியலிடும் நாள் : 14.03.24
பட்டியலிடப்படும்
சந்தை : பி.எஸ்.இ., - என்.எஸ்.இ.,
பங்கு விலை : ரூ.381 - 401
பங்கின் முகமதிப்பு : ரூ.1
திரட்டப்படும் நிதி : ரூ.650 கோடி

