தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி 24,120க்கு மேலே முடிந்தால் ஏற்றத்துக்கு வாய்ப்பு

டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி 24,120க்கு மேலே முடிந்தால் ஏற்றத்துக்கு வாய்ப்பு

டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி 24,120க்கு மேலே முடிந்தால் ஏற்றத்துக்கு வாய்ப்பு


UPDATED : ஜூலை 28, 2026 12:47 AM

ADDED : ஜூலை 28, 2026 12:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2026 12:47 AM ADDED : ஜூலை 28, 2026 12:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்றைய வர்த்தகத்தில் தொடக்கத்தில் இருந்தே உயர்வுடன் காணப்பட்ட நிப்டி, நாளின் இறுதியில் 228 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி100' குறியீடு குறைந்த பட்சமாக 1.00 சதவீதமும், 'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு அதிக பட்சமாக 1.33 சதவீதமும் ஏற்றத்துடனும் காணப்பட்டன. 21 துறை சார்ந்த குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி ஆயில் & கேஸ்' குறியீடு குறைந்த பட்சமாக 0.02 சதவீதமும், 'நிப்டி மீடியா' குறியீடு அதிக பட்சமாக 2.39 சதவீதமும் அதிகரித்து முடிந்தன. வர்த்தகம் நடந்த 3,446 நிறுவனங்களின் பங்குகளில் 2,259 ஏற்றத்துடனும்; 1,071 இறக்கத்துடனும்; 116 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.

நிப்டி 24,000த்திற்கு அருகே கன்சாலிடேட் ஆகியுள்ளது. குறுகிய கால மொமென்டம் அதிகரித்துள்ளது என்பதை ஸ்டோக்காஸ்ட்டிக் க்ராஸ் ஓவர் உணர்த்துகிறது. 50 நாள் இ.எம்.ஏ.,க்கு மேலே நிறைவடைந்தாலும், 100 மற்றும் 200 நாள் இ.எம்.ஏ.,களுக்கு கீழே இருப்பதால் மத்திமகால டிரெண்டு இன்னும் பலவீனமாகவே உள்ளது. உடனடி ரெசிஸ்டென்ஸ் 24,030-24,120லும், உடனடி சப்போர்ட் 23,940-23,980லும் இருக்கிறது.

நிப்டி 24,120க்கு மேலே நிலைத்து நிறைவடைந்தால் மட்டுமே குறுகியகால டிரெண்டு பாசிட்டிவாக மாற வாய்ப்புள்ளது. 23,940க்கு கீழே நிலைத்தால் 23,800 வரை அழுத்தம் நீடிக்கலாம்.

இந்த நிலைகளை தாண்டும் வரை நிப்டி குறுகிய வரம்பிற்குள் நகரும் வாய்ப்பே அதிகம் எனலாம். எப் அண்டு ஓ எக்ஸ்பைரிக்கான நகர்வுகள் இருக்கும் என்பதால் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையிலான கணிப்புகள் சரிவர செயல்படாமல் போகக்கூடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us