/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஆலையை மூடும் திட்டமில்லை நிஸான் நிறுவனம் விளக்கம்
/
ஆலையை மூடும் திட்டமில்லை நிஸான் நிறுவனம் விளக்கம்
ADDED : மே 20, 2025 10:36 PM

சென்னை:நிஸான் நிறுவனத்தின் இழப்புகள் மற்றும் செயல்பாட்டு செலவை குறைக்க, ஜப்பான், மெக்சிகோ, அர்ஜென்டினா உட்பட உலக அளவில் இயங்கி வரும் 17 ஆலைகளில், ஏழு ஆலைகள் மூடப்படுவதாக தகவல் அண்மையில் வெளியானது.
குறிப்பாக, இந்தியாவில் இருந்து இந்நிறுவனம் வெளியேற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இவை வெறும் வதந்திகள் என, நிஸான் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
யூகங்களின் அடிப்படையில் வெளியாகும் வதந்திகளுக்கு, நிஸான் நிறுவனம் பதில் அளிக்காது. உலகளவில் ஆலைகளை மூடுவது தொடர்பாக, எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் உள்ள ரெனோ நிஸான் ஆலையை, ரெனோ நிறுவனம் முழுமையாக கையகப்படுத்துவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நிஸான் நிறுவனம், இந்தியாவில் தொடர்ந்து செயல்படும். எங்கள் முகவர்கள், வாடிக்கையாளர்களுக்கு விற்பனை மற்றும் கார் பராமரிப்பு சேவைகளை தொடர்ந்து வழங்குவர்.
முதற்கட்டமாக இங்கு, ஒரு எம்.பி.வி., மற்றும் இரு எஸ்.யூ.வி., கார்கள் அறிமுகப்படுத்தப்படும். ஒரு கார், ஒரு உலகம் என்ற உத்தியின் அடிப்படையில், இந்தியாவில் இருந்து உலக சந்தைக்கு நிஸான் கார்கள் ஏற்றுமதியும் செய்யப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.