/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஜி.எஸ்.டி., தொடர்பாக டாடா ஸ்டீலுக்கு நோட்டீஸ்
/
ஜி.எஸ்.டி., தொடர்பாக டாடா ஸ்டீலுக்கு நோட்டீஸ்
ADDED : ஜூன் 29, 2025 08:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கடந்த 2018 - 19ம் நிதியாண்டு முதல் 2022 - 23ம் நிதியாண்டுக்கிடையே, விதிகளை மீறி கிட்டத்தட்ட 1,007.55 கோடி ரூபாய் மதிப்பிலான ஜி.எஸ்.டி.,க்கான உள்ளீட்டு வரி பயனை பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரில் உள்ள மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் கூடுதல் மற்றும் இணை ஆணையர் அலுவலகத்தில் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் பெற்றுள்ளதாக டாடா ஸ்டீல் பங்கு சந்தை தாக்கலில் தெரிவித்துள்ளது-.
இதுகுறித்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், குற்றச்சாட்டு குறித்து ஆணையரகத்தில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது--.