
150
வ ங்கி கடன் மோசடி புகாரின் பேரில், லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே அமைந்துள்ள, இந்திய தொழிலதிபரின் 150 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை அமலாக்கத்துறை முடக்கிஉள்ளது.
ஜவுளித்துறையைச் சேர்ந்த 'எஸ்.குமார்ஸ் நேஷன்வைட்' நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிதின் காஸ்லிவால், இந்திய வங்கிகளிடம் கிட்டத்தட்ட 1,400 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர், வெளிநாட்டு முதலீடு என்ற பெயரில் பணத்தை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு திருப்பிவிட்டு, அங்குள்ள அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் வாயிலாக பல சொத்துகளை வாங்கியுள்ளார் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது
638
வோ டபோன் ஐடியா நிறுவனத்துக்கு 638 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆமதாபாத் மத்திய ஜி.எஸ்.டி., கூடுதல் ஆணையர் அலுவலகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக, வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி., குறைவாக செலுத்தியது மற்றும் உள்ளீட்டு வரி பயனை வரம்புக்கு மீறி பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வரியுடன் சேர்த்து வட்டி மற்றும் அபராத தொகையும் இதில் அடங்கும். இந்த உத்தரவை ஏற்க மறுத்துள்ள வோடபோன் ஐடியா, இதற்கு எதிராக தகுந்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

