sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 21, 2026 ,சித்திரை 8, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

 எண்கள்

/

 எண்கள்

 எண்கள்

 எண்கள்


ADDED : மார் 24, 2026 01:23 AM

Google News

ADDED : மார் 24, 2026 01:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

79,256

வ ங்கிகளின் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக, ரிசர்வ் வங்கி 79,256 கோடி ரூபாயை தற்காலிகமாக வழங்கியுள்ளது. இதற்கான சராசரி வட்டி விகிதம் 5.26 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனி நபர்கள், நிறுவனங்கள் முன்கூட்டியே வரி செலுத்தியதால், வங்கிகளில் பணப்புழக்கம் பெருமளவு குறைந்துள்ளது. இதனால் தற்போது 65,395 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிகளில் பண பற்றாக்குறை நிலவுகிறது.

இதை ஈடுகட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை வழங்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டிருந்த நிலையில், சற்று குறைவான தொகையே தற்போது வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஜன., மாதம் முதல் திறந்தவெளி சந்தையில் அரசு பத்திரங்களை வாங்கியதன் வாயிலாக, 3.50 லட்சம் கோடி ரூபாயை நீண்டகால அடிப்படையில் ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

4,500

ஜெ ர்மனியை சேர்ந்த 'டோய்ச' வங்கியின் இந்திய சில்லரை வர்த்தகத்தை கையகப்படுத்துவதில் கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனிநபர், வீட்டு வசதி மற்றும் சிறு, குறு தொழில் கடன்கள், டிபாசிட்கள், சொத்து மேலாண்மை உள்ளிட்ட 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான டோய்ச வங்கியின் வர்த்தகத்தை வாங்க, கோட்டக் மஹிந்திரா 4,500 கோடி ரூபாய் வரை வழங்க முன்வந்துள்ளது. இது பெடரல் வங்கி குறிப்பிட்ட தொகையை விட அதிகம்.

பெருநிறுவன மற்றும் முதலீட்டு வங்கி பிரிவில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக டோய்ச வங்கி தனது சில்லரை வர்த்தகத்தை விற்க முடிவு செய்துள்ளது.






      Dinamalar
      Follow us