தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ எண்கள்

 எண்கள்

 எண்கள்


ADDED : ஜூன் 06, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

11 இ ந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு மே 29 நிலவரப்படி 64.83 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது 11 மாத இறக்குமதி தேவையையும், 89.10 சதவீத வெளிநாட்டு கடனையும் சமாளிக்க போதுமானது என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

மே 22ல் கையிருப்பு குறைந்து 64.74 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், மே 29ல் 8,914 கோடி ரூபாய் உயர்ந்தது. இதற்கு முன், பிப்., 27ல் 69.22 லட்சம் கோடி ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2.39 ப ணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வாயிலாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், 2.39 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் ராகுல் நவீன் தெரிவித்தார். மேலும், நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களின் 63,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டு, உரியவரிடம் வழங்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us