/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
500வது கடை திறப்பு வி - மார்ட் புது மைல்கல்
/
500வது கடை திறப்பு வி - மார்ட் புது மைல்கல்
ADDED : ஏப் 16, 2025 11:50 PM

புதுடில்லி:சில்லரை விற்பனை நிறுவனமான 'வி--மார்ட் ரீடெய்ல் லிமிடெட்', அதன் 500வது கடையை திறந்து ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு துவங்கப்பட்ட வி--மார்ட், இப்போது நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்படுகிறது. 43 லட்சம் சதுர அடி இடம் மற்றும் கிட்டத்தட்ட 10 கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்துள்ள நிலையில், நிறுவனம் அதன் வணிகத்தை தொடர்ந்து விரிவுபடுத்துகிறது.
கடந்த 2024-25 நிதியாண்டில் மட்டும் இந்நிறுவனம் 62 புதிய கடைகளை திறந்தது.
இந்நிறுவனம் அன்லிமிடெட் மற்றும் லைம்ரோட்.காம் ஆகிய பிராண்டுகளின் கீழ் செயல்படுகிறது.
''இந்த 500வது கடை சாதனை, எங்கள் குழுவின் அர்ப்பணிப்பின் விளைவாகும், ஒவ்வொரு இந்தியரும் அடையக்கூடிய தரமான பேஷனை கொண்டு வருவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்'' என்று வி--மார்ட் ரீடெய்ல் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் லலித் அகர்வால் கூறினார்.