/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
டிஜிலாக்கர் மூலம் பி.எப்., தகவல் வசதி
/
டிஜிலாக்கர் மூலம் பி.எப்., தகவல் வசதி
ADDED : ஜூலை 27, 2025 06:53 PM

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எப்., கணக்கு தகவல்களை டிஜிலாக்கர் வாயிலாக எளிதாக அணுகும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பி.எப்., உறுப்பினர்களுக்கான பல்வேறு புதிய வசதிகள் இந்த நிதியை நிர்வகிக்கும் அமைப்பால் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பாதுகாத்து அணுகும் வசதியான டிஜிலாக்கர் மூலம், பி.எப்., கணக்கு தொடர்பான தகவல்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு போன்களில் டிஜிலாக்கர் செயலி மூலம் பி.எப்., பாஸ்புக், கணக்கில் உள்ள தொகை உள்ளிட்டதகவல்களை எந்த நேரத்திலும், எந்த இடத்தில் இருந்தும் அணுகலாம். மேலும், முக்கிய ஆவணங்களையும் இதன் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஐபோன்களுக்கு இந்த வசதி இன்னமும் அறிமுகம் ஆகவில்லை. ஏற்கனவே, யூமாங் செயலி வாயிலாக பாஸ்புக் தரவிறக்கம் செய்யும் வசதி இருந்தாலும் தற்போது டிஜிலாக்கர் மூலம் எளிதாக அணுகும் வசதி அறிமுகம் ஆகியுள்ளது. ஒரே கிளிக்கில் இந்த வசதிகளை அணுகலாம்.
இணையம் மூலமே பணத்தை விலக்கி கொள்ளும் வசதி உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் வசதிகள் அண்மை காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

