/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
2 மாவட்டங்களில் ஆலை ரூ.6,000 கோடிக்கு ஒப்பந்தம்
/
2 மாவட்டங்களில் ஆலை ரூ.6,000 கோடிக்கு ஒப்பந்தம்
ADDED : பிப் 17, 2026 01:25 AM

சென்னை:திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புதிய ஆலைகள் அமைப்பதற்கு தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஜப்பான் நாட்டை சேர்ந்த மினிபியா மிட்சுமி நிறுவனம், செமிகண்டக்டர், மோட்டார், சென்சார்கள், மின்சாதனங்கள் தயாரித்து வருகிறது.
இதன் துணை நிறுவனமான என்.எம்.பி., மினிபியா இந்தியா நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழில் பூங்காவில், 1,980 கோடி ரூபாய் முதலீட்டில், செமிகண்டக்டர்கள், ஐ.சி.,க்கள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்கவும் முன்வந்துள்ளது.
இதன்வாயிலாக, 1,400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சிப்காட் பூங்காவில் விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை உற்பத்தி தொகுப்பு அமைப்பதற்கும், விமான இயந்திரங்கள், கியர்பாக்ஸ் உதிரி பாகங்கள் உற்பத்தி ஆலை அமைக்கவும் ஏக்வஸ் குழுமம் முன்வந்து உள்ளது.
இதற்காக, 4,000 கோடி ரூபாயை இந்நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது. இதன்வாயிலாக, 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

