/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
கடல் உணவு ஏற்றுமதியை அதிகரிக்க பிரதமர் ஆலோசனை
/
கடல் உணவு ஏற்றுமதியை அதிகரிக்க பிரதமர் ஆலோசனை
ADDED : மே 16, 2025 01:30 AM

புதுடில்லி:மீன்வளத் துறையின் செயல்பாடுகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முக்கிய ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில், மீன்வளத் துறையை மேம்படுத்துவது குறித்தும், கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆழ்கடல் மீன்பிடிப்பை அதிகரிப்பது குறித்தும் அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் மத்திய மீன்வளத் துறை அமைச்சகம், நாட்டின் ஏழு கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 255.30 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிமுகப்படுத்தியது. மீன்பிடி தொழில் ஊரகப் பகுதி மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக விளங்குவதோடு, இந்திய பொருளாதாரத்துக்கும் குறிப்பிடத்தக்க பங்களிக்கிறது.