/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
தனியார் துறை வளர்ச்சி; அக்டோபரில் குறைந்தது!
/
தனியார் துறை வளர்ச்சி; அக்டோபரில் குறைந்தது!
UPDATED : அக் 25, 2025 08:21 AM
ADDED : அக் 24, 2025 11:43 PM

புதுடில்லி: நாட்டின் தனியார் துறை வளர்ச்சி கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு இம்மாதம் குறைந்துள்ளதாக எச்.எஸ்.பி.சி., நிறுவனத்தின் பிளாஷ் பி.எம்.ஐ., குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சேவைகள் துறையின் சுமாரான செயல்பாடு காரணமாக இம்மாதம் நாட்டின் தனியார் துறை வளர்ச்சி சற்று குறைந்துள் ளது. கடந்த மாதம் 61 புள்ளி களாக இருந்த பிளாஷ் கூட்டு பி.எம்.ஐ., குறியீடு இம்மாதம் 59.90 புள்ளிகளாக குறைந்துள்ளது.
இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் வளர்ச்சியை குறிக்கும். குறைவாக இருந்தால் சரிவை குறிக்கும். எனவே இம்மாதம் வளர்ச்சி குறைந்துள்ள போதிலும், சரிவு காணவில்லை. கடந்த மே மாதத்துக்கு பின், நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் புதிய ஆர்டர்கள் இம்மாதம் மிகக் குறைந்த வேகத்தில் அதிகரித்துள்ளன. சர்வதேச விற்பனையிலும் இதே நிலை தொடர்கிறது.
சேவைகள் துறை பி.எம்.ஐ., 60.90 புள்ளிகளில் இருந்து, 58.80 புள்ளிகளாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் தயாரிப்பு துறை பி.எம்.ஐ., 57.70 புள்ளிகளில் இருந்து 58.40 புள்ளி களாக அதிகரித்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

