தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ சரக்கு போக்குவரத்தில் லாபம் குறையும்: இக்ரா

 சரக்கு போக்குவரத்தில் லாபம் குறையும்: இக்ரா

 சரக்கு போக்குவரத்தில் லாபம் குறையும்: இக்ரா


ADDED : ஜூன் 13, 2026 03:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2026 03:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: நடப்பு நிதியாண்டில், சரக்கு போக்குவரத்து நிறுவனங்களின் வருவாய் அதிகரித்தாலும், லாபம் குறைவாகவே இருக்கும் என சந்தை மதிப்பீடு நிறுவனமான 'இக்ரா' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டில், சரக்கு போக்குவரத்து நிறுவனங்களின் வருவாய் 8 - 10 சதவீதம் உயரும். ஆனால், செயல்பாட்டு செலவு, வருவாயை விட அதிகரிக்கும் என்பதால், லாபம் குறைய வாய்ப்பு உள்ளது. மொத்த செயல்பாட்டு செலவில், எரிவாயு செலவு மட்டும் 50 முதல் 60 சதவீதம் ஆகும்.

டீசல் விலை, ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் உயர்ந்தால், 1.50 முதல் 20 சதவீதம் வரை லாபம் குறையலாம். கடந்த மே மாதத்தில் டீசல் விலை, எட்டு சதவீதம் உயர்ந்ததால், சரக்கு போக்குவரத்து செலவு ஏழு சதவீதம் அதிகரித்துள்ளது. அதிக போட்டித்தன்மை ஏற்படுவதால், நிறுவனங்களால் சரக்கு போக்குவரத்து விலையை உயர்த்த முடியவில்லை.

பெரிய நிறுவனங்கள், நீண்ட கால ஒப்பந்த முறையில் செயல்படுவதால், லாபம் பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை. சிறிய நிறுவனங்கள் அதிக நிதி அழுத்தத்திற்கு தள்ளப்படுகின்றன. பணவீக்கம், வினியோக தொடர் சிக் கல்கள் மற்றும் நுகர்வோர் தேவை குறைவதால், நுகர்வோர் பொருட்கள், வாகன துறைகளில் சரக்கு போக்குவரத்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us