sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

சந்தையில் நீடித்த ஊசலாட்டம்

/

சந்தையில் நீடித்த ஊசலாட்டம்

சந்தையில் நீடித்த ஊசலாட்டம்

சந்தையில் நீடித்த ஊசலாட்டம்


ADDED : டிச 25, 2024 01:48 AM

Google News

ADDED : டிச 25, 2024 01:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

• வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் சிறிய இறக்கத்துடன் நிறைவடைந்தன

• நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போதே, இந்திய சந்தை குறியீடுகள் ஊசலாட்டத்துடன் துவங்கின. பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு, பிற்பகல் வரை சந்தை சிறிய ஏற்றத்துடன் வர்த்தகமாகியது. பிற்பகல் வர்த்தகத்தின் போது, முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால், முடிவில் சிறிய இறக்கத்துடன் முடிவடைந்தன

• நிப்டி குறியீட்டில் நுகர் பொருட் கள், எண்ணெய் மற்றும் எரி வாயு, வாகனத்துறை தவிர, அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடு களும் இறக்கம் கண்டன. அதிகபட்சமாக, உலோகத்துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடு ஒரு சதவீதமும்; பொதுத்துறை வங்கி, தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடு 0.5 சதவீதமும் இறக்கம் கண்டன

• மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங் களில், 2,023 நிறுவன பங்குகள் குறைந்தும்; 1,972 நிறுவன பங்குகள் உயர்ந்தும்; 97 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின

• கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று இந்திய பங்குச் சந்தைக்கு விடுமுறை.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 2,454 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.62 சதவீதம் அதிகரித்து, 73.08 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா குறைந்து, வரலாறு காணாத வகையில் 85.20 ரூபாயாக இருந்தது.

டாப் 5 நிப்டி 50 பங்குகள்

அதிக ஏற்றம் கண்டவை

 டாடா மோட்டார்ஸ்

 அதானி என்டர்பிரைசஸ்

 ஐச்சர் மோட்டார்ஸ்

 நெஸ்லே இந்தியா

 பி.பி.சி.எல்.,

அதிக இறக்கம் கண்டவை

 பவர் கிரிட்

 ஜே.எஸ்.டபிள்யு., ஸ்டீல்

 எஸ்.பி.ஐ.,லைப்

 டைட்டன்

 இன்போசிஸ்






      Dinamalar
      Follow us