/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பருப்பு இறக்குமதி 2004 - 25ல் 9 ஆண்டுகளில் இல்லாத அதிகம்
/
பருப்பு இறக்குமதி 2004 - 25ல் 9 ஆண்டுகளில் இல்லாத அதிகம்
பருப்பு இறக்குமதி 2004 - 25ல் 9 ஆண்டுகளில் இல்லாத அதிகம்
பருப்பு இறக்குமதி 2004 - 25ல் 9 ஆண்டுகளில் இல்லாத அதிகம்
ADDED : ஏப் 13, 2025 01:28 AM

புதுடில்லி,:கடந்த நிதியாண்டில், நாட்டின் பருப்புகள் இறக்குமதி ஒன்பது ஆண்டுகளில் இல்லாத வகையில், 67 லட்சம் டன்களாக அதிகரித்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டில் நிலையான வினியோகத்தை உறுதி செய்யவும், விலை உயர்வை தவிர்ப்பதற்கும், பெரும்பாலான பருப்பு வகைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு வரியை ரத்து செய்திருந்தது.
சாதகமான வரி அமைப்பின் காரணமாக, கடந்த நிதியாண்டில் பருப்பு இறக்குமதி ஒன்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் 67 லட்சம் டன்னாக அதிகரித்திருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இறக்குமதி அதிகரிப்புக்கு மிகப்பெரிய பங்களிப்பு, மஞ்சள் பட்டாணி இறக்குமதியில் ஏற்பட்ட ஏற்றமே ஆகும்.
கடந்த 2025ம் நிதியாண்டில், இந்தியா 20.4 லட்சம் டன் மஞ்சள் பட்டாணியை இறக்குமதி செய்துள்ளது. இது மொத்த இறக்குமதியில் 31 சதவீதம். கடந்த 2018ம் நிதியாண்டுக்கு பின் அதிகபட்ச இறக்குமதி இதுவாகும். மஞ்சள் பட்டாணியைத் தொடர்ந்து, பருப்பு வகைகளில் இந்தியாவில் அதிகமாக இறக்குமதியாவது 'தேசி சென்னா' எனப்படும் கருப்பு கொண்டை கடலையாகும்.