/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
' சிசிடிவி ' கேமராக்களுக்கு தர சான்றிதழ் கட்டாயம்
/
' சிசிடிவி ' கேமராக்களுக்கு தர சான்றிதழ் கட்டாயம்
ADDED : மே 01, 2025 11:41 PM

புதுடில்லி:'சிசிடிவி' கேமராக்களுக்கான தரச்சான்றிதழை பெறாத நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என பி.ஐ.எஸ்., தெரிவித்துள்ளது-.
சீனாவிலிருந்து கண்மூடித்தனமான இறக்குமதிகளை சமாளிக்க, 'சிசிடிவி' கேமராக்களுக்கான கட்டாய தரப்படுத்துதல் சோதனை மற்றும் தரச்சான்றிதழ் பெறுவதை, மத்திய அரசின் இந்தியர தர நிர்ணய நிறுவனம் கடந்த மாதம் 9ம் தேதி முதல் கட்டாயமாக்கியுள்ளது-.
இதுகுறித்து அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் 21 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் தர நிர்ணயத்தை பூர்த்தி செய்ய தவறுவோரின் பி.ஐ.எஸ்., உரிமம் சஸ்பெண்ட் அல்லது ரத்து உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
காலக்கெடுவுக்குள் புதிய விதிமுறைகளை பின்பற்றும் நிறுவனங்கள் தங்களின் தற்போதைய பதிவு எண்களை தக்கவைத்துக் கொள்ளும். தவறும் நிறுவனங்களின் உரிமம் ரத்தாவதுடன், மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க நேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

