/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
வட்டியை குறைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஆர்.பி.ஐ., ரெப்போ வட்டி 0.50% குறைப்பு ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஆர்.பி.ஐ., வீடு, வாகன, தனிநபர் கடன் வட்டி குறையும்

ADDED : ஜூன் 07, 2025 12:33 AM

மும்பை:ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை, அரை சதவீதம் குறைத்துள்ளது. இதையடுத்து, ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாக குறைந்துள்ளது.
மும்பையில் கடந்த 4ம் தேதி துவங்கி நடைபெற்று வந்த ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
கால் சதவீதம் அளவுக்கு வட்டி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆச்சரியப்படத்தக்க வகையில் அரை சதவீதம் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்துக்கு பின், இதுவே மிகக் குறைந்த வட்டி விகிதம்.
இதையடுத்து, வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான இ.எம்.ஐ., எனும் மாதாந்திர தவணை மேலும் குறையக்கூடும்.