/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
இந்தியர்கள் காப்பீடு பெறும் காரணங்கள்!
/
இந்தியர்கள் காப்பீடு பெறும் காரணங்கள்!
ADDED : செப் 23, 2024 01:38 AM

விடுமுறை பயணம் மேற்கொள்வது போன்ற வாழ்வியல் தேவைகளை விட, குடும்பத்தின் நிதி பாதுகாப்பை முக்கியமாக கருதி இந்தியர்களில் பெரும்பாலானோர் ஆயுள் காப்பீடு பெறுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கனரா எச்.எஸ்.பி.சி., லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், சுயேச்சை கருத்துக்கணிப்பு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து, முதல் மற்றும் இரண்டாம் அடுக்கு நகரங்களில் உள்ளவர்கள் மத்தியில் காப்பீடு தேவை மற்றும் நோக்கம் பற்றி அறிய ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 70 சதவீதம் பேர், குடும்பத்தின் நிதி பாதுகாப்பே காப்பீடு பெற முக்கிய நோக்கம் என கூறியுள்ளனர். மேலும், 64 சதவீதம் பேர், முன்கூட்டியே டெர்ம் காப்பீடு பெற்றிருக்க வேண்டும் என நினைப்பதாக கூறியுள்ளனர்.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 83 சதவீதம் பேர், டெர்ம் காப்பீட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தாலும், 11 சதவீதம் பேர் மட்டுமே ஆண்டுதோறும் காப்பீடு அளவை ஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளனர்.
அதே போல, பலரும் ஓய்வு கால திட்டமிடலை முன்கூட்டியே மேற்கொள்ளவில்லை எனும் வருத்தம் இருப்பதாகவும் கூறியுள்ளனர். ஓய்வு காலத்திற்கு தயாராக இருப்பதாக 27 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர்.