/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
மின்வாகன பேட்டரி சார்ஜிங் நிலையம் மானியம் பெற விதிமுறைகள் வெளியீடு
/
மின்வாகன பேட்டரி சார்ஜிங் நிலையம் மானியம் பெற விதிமுறைகள் வெளியீடு
மின்வாகன பேட்டரி சார்ஜிங் நிலையம் மானியம் பெற விதிமுறைகள் வெளியீடு
மின்வாகன பேட்டரி சார்ஜிங் நிலையம் மானியம் பெற விதிமுறைகள் வெளியீடு
ADDED : செப் 29, 2025 11:16 PM

புதுடில்லி : மின்வாகன பேட்டரி சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விதிகளில் கூறியிருப்பதாவது:
பி.எம்., இ-டிரைவ் திட்டத்தின்கீழ், நாடு முழுதும் 72,300 பொது சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. அரசு கட்டடங்கள், நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மையங்கள், வணிக வளாகங்கள் ஆகிய பொது இடங்களில் பேட்டரி சார்ஜிங் நிலையங்களை அமைக்க மானிய நடைமுறை குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அரசு அலுவலகங்கள், குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்களில் சார்ஜிங் நிலையம் அமைக்க 100 சதவீத மானியம் வழங்கப்படும். பொது பயன்பாட்டுக்கு அனுமதித்தால் மட்டுமே இது பொருந்தும்.
ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், நகராட்சி வாகன நிறுத்துமிடங்கள், பொதுத் துறை துறைமுகங்கள், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் சில்லறை விற்பனை நிலையங்கள், மத்திய, மாநில அரசுகள் நடத்தும் சுங்கச்சாவடிகள் ஆகிய இடங்களில் பேட்டரி சார்ஜிங் நிலையங்கள் அமைக்க 80 சதவீத மானியம் வழங்கப்படும்.
மானியத் தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படும். கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும்போது முதல் தவணையும், விதிமுறைகளை நிறைவு செய்ததை உறுதிப்படுத்திய பிறகு, பேட்டரி சார்ஜிங் நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது இரண்டாவது தவணையும் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.