/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ரூ.19 லட்சம் கோடியை தாண்டிய ரிலையன்ஸ் மதிப்பு
/
ரூ.19 லட்சம் கோடியை தாண்டிய ரிலையன்ஸ் மதிப்பு
ADDED : ஜன 30, 2024 10:56 AM
மும்பை : 'ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ்' நிறுவனத்தின் பங்குகள், கடந்த ஓர் ஆண்டில் இல்லாத உச்சமாக, நேற்று வர்த்தகத்துக்கு இடையே 2,905 ரூபாயை எட்டியது. நிறுவனத்தின் சந்தை மதிப்பும் 19.55 லட்சம் கோடி ரூபாயை எட்டியது.
'ரிலையன்ஸ் ஜியோ சினிமா, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்' நிறுவனங்களை இணைக்க, ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் மற்றும் டிஸ்னி நிறுவனங்கள் கடந்த மாதம் நடவடிக்கைகளை துவங்கின.
இந்நிலையில், டிஸ்னி நிறுவனம், அதன் இந்திய சொத்துக்களின் மதிப்பு 83,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்த நிலையில், தற்போது 37,350 கோடி ரூபாய் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நேற்று வர்த்தக நேர முடிவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள், ஏழு சதவீதம் அதிகரித்து 2,890 ரூபாயாக இருந்தது.
அதிகரித்து வரும் மூலதன செலவீனம் மற்றும் வலுவான சில்லரை வணிக செயல்பாடுகள் காரணமாக, நடப்பு ஜனவரி மாதத்தில் மட்டும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.