உள்ளடக்கத்திற்கு செல்ல

கைத்தறி நுாலுக்கு ஜி.எஸ்.டி., விலக்கு கேட்டு தீர்மானம்
கைத்தறி நுாலுக்கு ஜி.எஸ்.டி., விலக்கு கேட்டு தீர்மானம்
ADDED : ஜூலை 23, 2025 11:56 PM

அ நிறம் | அளவு
சேலம்,:நுால் வியாபாரிகள் சங்க கூட்டத்தில், கைத்தறி நுாலுக்கு ஜி.எஸ்.டி., விலக்கு அளிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம் மாவட்ட நுால் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம், அழகாபுரத்தில் நடந்தது.
அதில் கைத்தறி நுால்களுக்கு, 5 சதவீத ஜி.எஸ்.டி., வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளித்தல்; வணிகர்கள் நல வாரியத்தில் அனைத்து வியாபாரிகளையும் உறுப்பினர்களாக இணைத்தல்; நலிந்த உறுப்பினர்களுக்கு உதவி தொகை வழங்குதல் உட்பட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
