/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
தொலைபேசி நிறுவனங்களின் சீராய்வு மனு தள்ளுபடி ஒரு லட்சம் கோடிக்கு மேல் பாக்கியை செலுத்த நேரிடும்

ADDED : செப் 20, 2024 01:25 AM

புதுடில்லி:மொத்த வருமானம் குறித்த, தொலைதொடர்பு துறையின் கணக்கீட்டில் தவறு இருப்பதாக கூறி, தொலைபேசி நிறுவனங்கள் தொடர்ந்த சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தொலைதொடர்பு நிறுவனங்கள், கடந்த 10 ஆண்டுகளாக மொத்த வருவாயில் பாக்கி வைத்துள்ள லைசென்ஸ் கட்டணம், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் ஆகியவற்றை செலுத்த உத்தரவிடக் கோரி, 2020ல் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கில், கட்டணங்கள், அவற்றின் மீதான வட்டி மற்றும் அபராதமாக 1.47 லட்சம் கோடி ரூபாயை செலுத்த, தொலைபேசி நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தங்களது மொத்த வருவாய் குறித்து தொலைதொடர்பு துறையின் கணக்கீட்டில் பிழைகள் இருப்பதாகக் கூறி, 2021ல் தொலைபேசி நிறுவனங்கள் விடுத்த கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
கடந்த ஆண்டில் 'ஏர்டெல், வோடபோன் ஐடியா' நிறுவனங்கள் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகி, லைசென்ஸ் கட்டணத்தை ஏற்பதாகவும், கட்டண பாக்கி மீதான அபராதம் மற்றும் அபராத தொகைக்கு வட்டி விதிக்கப்படுவதை நீக்குமாறும், சீராய்வு மனு செய்தன.
மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சிவ் கன்னா, பி.ஆர்.கவாய் அமர்வு, வருவாய் கணக்கீட்டில் தவறு இருப்பதாகக் கூறியதை ஏற்க மறுத்து, சீராய்வு மனுவை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இது தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
2020ல் தொலைபேசி நிறுவனங்களின் கட்டண நிலுவை ரூ.1.47 லட்சம் கோடி
உரிமக் கட்டணம் ரூ.92,642 கோடி
அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் ரூ.55,054 கோடி
மொத்த தொகையில் வட்டி, அபராதம், அபராத வட்டி 75%