/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
தொழில்களுக்கு உதவ ரூ.100 கோடி நிதி
/
தொழில்களுக்கு உதவ ரூ.100 கோடி நிதி
ADDED : மார் 29, 2025 11:11 PM

சென்னை, மார்ச் 30--
தமிழகத்தில் சிறிய அளவிலான தொழில் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஆதரவளிக்க, 500 கோடி ரூபாயில், தொழில்களுக்கான சூழல் அமைப்பு நிதியத்தை தமிழக அரசு துவக்கியுள்ளது.
இதை நிர்வகிக்கும் முகமையாக, 'டிட்கோ' செயல்படுகிறது. இந்த நிதியத்திலிருந்து, தமிழக அரசின் 'சிப்காட்' மற்றும் வழிகாட்டி நிறுவனங்களின் கருத்துருக்களின் அடிப்படையில், கழிவுநீர் வெளியேற்ற கட்டமைப்பு, பூங்கா உள்ளிட்ட சிறிய அளவிலான உட்கட்டமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுகின்றன.
இதுவரை, 245 கோடி ரூபாயில், 25 பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கூடுதல் பணிகளை மேற்கொள்வதற்கு டிட்கோ அரசிடம், 150 கோடி ரூபாய் நிதி உதவி கோரியது. தற்போது, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.