/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
அரிய வகை காந்தம் உற்பத்திக்கு ரூ.1,345 கோடியில் ஊக்கத்தொகை
/
அரிய வகை காந்தம் உற்பத்திக்கு ரூ.1,345 கோடியில் ஊக்கத்தொகை
அரிய வகை காந்தம் உற்பத்திக்கு ரூ.1,345 கோடியில் ஊக்கத்தொகை
அரிய வகை காந்தம் உற்பத்திக்கு ரூ.1,345 கோடியில் ஊக்கத்தொகை
ADDED : ஜூலை 12, 2025 12:05 AM

புதுடில்லி:அரிய வகை காந்தங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க, 1,345 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என, மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சகங்களுக்கு இடையே ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, இரண்டு உற்பத்தியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரசு முடிவு
அரிய வகை காந்தங்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் சீனா, இவற்றின் ஏற்றுமதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இதனால், இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வாகன தொழில் துறையினர் மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த பாதிப்பைக் குறைக்க உள்நாட்டிலேயே அரிய வகை காந்தங்களின் உற்பத்தியை ஊக்குவிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கனரக தொழில் துறை செயலர் கம்ரான் ரிஸ்வி தெரிவித்ததாவது:
காந்தங்களை உற்பத்தி செய்து தரும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். 1,345 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, அமைச்சகங்களுக்கு இடையே ஆலோசனை நடைபெற்று வருகிறது.
குறைந்த செலவு
ஆலோசனை முடிவடைந்ததும், இந்த பரிந்துரை மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
இத்திட்டத்தின்படி அரிய வகை ஆக்டைடுகளை காந்தங்களாக மாற்றுவதற்கு முழு ஆதரவு வழங்கப்படும். நிறுவனங்களும் குறைந்த செலவில் இதற்கான சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க முடியும்.
இவ்வாறு தெரிவித்தார்.
பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் 'ரேர் எர்த் மேக்னெட்ஸ்' நிறுவனம் மட்டும் தான், அரிய வகை காந்தங்களை சேமிப்பதற்கான அதிகாரம் பெற்றுள்ளது.