/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சார்ஜிங் வசதிக்கு ரூ.16,000 கோடி தேவை
/
சார்ஜிங் வசதிக்கு ரூ.16,000 கோடி தேவை
ADDED : டிச 18, 2024 01:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:நாட்டின் மின் வாகன இலக்கின் அடிப்படையில், சார்ஜிங் கட்டமைப்பை ஏற்படுத்த 16,000 கோடி ரூபாய் தேவை என 'பிக்கி' எனும் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பொது சார்ஜிங் அமைப்பை அதிகரிக்க, நாட்டின் முதல் 40 நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மின் வாகன பயன்பாட்டை அதிகரிக்க, மத்திய அரசு, 'பேம் 2' மற்றும் 'பி.எம்., இ - டிரைவ்' திட்டங்களை அறிவித்தது.
மின் வாகனம் தொடர்பான சார்ஜிங் உள்ளிட்ட சேவைகளுக்கு, ஒரே மாதியான ஜி.எஸ்.டி., விதிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.