/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஏற்றுமதிக்கு உதவ ரூ.3,362 கோடி கடன்!
/
ஏற்றுமதிக்கு உதவ ரூ.3,362 கோடி கடன்!
UPDATED : ஜன 11, 2026 09:08 AM
ADDED : ஜன 11, 2026 01:16 AM

புதுடில்லி: ஏற்றுமதியாளர்களுக்கு உதவுவதற்கு, மத்திய அரசு அறிவித்துள்ள கடன் உத்தரவாத திட்டத்தின்கீழ், 3,362 கோடி ரூபாய் கடன் தொகை இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிதியமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு உதவ கடன் உத்தரவாத திட்டம் கடந்த டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. மொத்த கடன் தொகை 20,000 கோடி ரூபாய், வரும் மார்ச் 31 வரை அல்லது கடன் தொகை முழுமையாக பெறப்படும் வரை இத்திட்டம் நடைமுறையில் இருக்கும்.
இதுவரை 8,764.81 கோடி ரூபாய்க்கு கடன் கேட்டு, 1,840 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை பரிசீலித்து, கடந்த இரண்டாம் தேதி வரை 774 ஏற்றுமதியாளர்களுக்கு 3,362 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

