தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ ஆறு மாத உச்சத்தில் சேவைத்துறை வளர்ச்சி

 ஆறு மாத உச்சத்தில் சேவைத்துறை வளர்ச்சி

 ஆறு மாத உச்சத்தில் சேவைத்துறை வளர்ச்சி


ADDED : ஜூன் 04, 2026 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 05:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: நாட்டின் சேவைத்துறை வளர்ச்சி, கடந்த மே மாதத்தில் ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஹெச்.எஸ்.பி.சி., வங்கியின் பி.எம்.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் விபரம்:

கடந்த ஏப்ரல் மாதத்தில் 58.80 புள்ளிகளாக இருந்த சேவைத்துறைக்கான பி.எம்.ஐ., குறியீடு, மே மாதத்தில் 59.80 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டு நவம்பர் மாதத்திற்கு பின் பதிவான மிக அதிக வளர்ச்சியாகும். சரக்கு போக்குவரத்து, இ - காமர்ஸ், பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கான வலுவான தேவையால் புதிய வணிக வாய்ப்புகள் அதிகரித்து விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது.

முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு தேவையும் பெருமளவு அதிகரித்துள்ளது. இதனால், நிறுவனங்கள் தொடர்ந்து புதிய பணியாளர்களை வேலைக்கு சேர்த்தன. இதனிடையே, தயாரிப்பு மற்றும் சேவைத்துறைகளை உள்ளடக்கிய கூட்டு பி.எம்.ஐ., குறியீடு ஏப்ரலில் 58.20 புள்ளிகளிலிருந்து மே மாதத்தில் 59.30 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us