
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
3,000 கோடி ரூபாய்
மினிமலிஸ்ட் நிறுவனத்தை, 3,000 கோடி ரூபாய்க்கு வாங்குவது தொடர்பாக, ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான மினிமலிஸ்ட், சரும பராமரிப்பு மருந்துகளை, நுகர்வோருக்கு நேரடியாக வினியோகிக்கிறது. இந்தியாவில் அழகு மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்களுக்கான சந்தை விரிவடையும் நிலையில், எச்.யு.எல்., மினிமலிஸ்ட் பிராண்டை வாங்க ஆர்வம் காட்டுகிறது.

