/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஓட்டப்பிடாரத்தில் தொழில் பூங்கா 1,000 ஏக்கரில் அமைக்கிறது 'சிப்காட்'
/
ஓட்டப்பிடாரத்தில் தொழில் பூங்கா 1,000 ஏக்கரில் அமைக்கிறது 'சிப்காட்'
ஓட்டப்பிடாரத்தில் தொழில் பூங்கா 1,000 ஏக்கரில் அமைக்கிறது 'சிப்காட்'
ஓட்டப்பிடாரத்தில் தொழில் பூங்கா 1,000 ஏக்கரில் அமைக்கிறது 'சிப்காட்'
ADDED : ஆக 10, 2024 12:18 AM

சென்னை:துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் அமைய உள்ள, 'சிப்காட்' தொழில் பூங்காவுக்கு, தெற்கு வீரபாண்டியபுரத்தில் இடம் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சிப்காட் எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனம், தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க வசதியாக, சாலை உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழில் பூங்காவை அமைத்து வருகிறது. சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில் அதிகளவில் தொழிற்சாலைகள் உள்ளன.
மாநிலம் முழுதும் தொழில் வளர்ச்சியை பரவலாக்க, தென்மாவட்டங்களில் தொழில் பூங்கா துவங்க, அரசு முன்னுரிமை அளிக்கிறது. துாத்துக்குடி மாவட்டத்தில் அதிகளவில் தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டு வருகின்றன.
எனவே, அம்மாவட்டத்தில் அதிகரித்து வரும் தொழில் மனை தேவையை கருத்தில் கொண்டு, ஓட்டப்பிடாரத்தில், 1,000 ஏக்கரில், புதிய தொழில் பூங்கா துவக்க, சிப்காட் முடிவு செய்துள்ளது.
இதன் வாயிலாக, 1,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், 25,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
புதிய பூங்காவுக்காக, முதல் கட்டமாக ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள, தெற்கு வீரபாண்டியபுரத்தில் இடம் கண்டறியப்பட்டு உள்ளது.
இதற்கு அரசிடம் அனுமதி கோரப்பட உள்ளது.
துாத்துக்குடியில் சிப்காட்டிற்கு ஏற்கனவே, துாத்துக்குடி துறைமுகம் அருகில், 2,509 ஏக்கரில் இரண்டு தொழில் பூங்காக்கள் உள்ளன. இதுதவிர, சில்லாநத்தத்தில், 415 ஏக்கரில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட பூங்கா, 'வின்பாஸ்ட்' நிறுவனத்தின் மின்வாகன ஆலைக்கு வழங்கப்பட்டது.
துாத்துக்குடி அல்லிக்குளத்தில், 2,200 ஏக்கர்; வெம்பூரில், 2,800 ஏக்கர்; இ.வேலாயுதபுரத்தில், 350 ஏக்கரில் பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.