sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

 அரசு ஆதரவு இல்லாததால் கிரானைட் தொழில் பாதிப்பு சலுகைகளை எதிர்பார்க்கும் சிறு, குறு தொழிற்சாலைகள்

/

 அரசு ஆதரவு இல்லாததால் கிரானைட் தொழில் பாதிப்பு சலுகைகளை எதிர்பார்க்கும் சிறு, குறு தொழிற்சாலைகள்

 அரசு ஆதரவு இல்லாததால் கிரானைட் தொழில் பாதிப்பு சலுகைகளை எதிர்பார்க்கும் சிறு, குறு தொழிற்சாலைகள்

 அரசு ஆதரவு இல்லாததால் கிரானைட் தொழில் பாதிப்பு சலுகைகளை எதிர்பார்க்கும் சிறு, குறு தொழிற்சாலைகள்


ADDED : ஜன 18, 2026 01:25 AM

Google News

ADDED : ஜன 18, 2026 01:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் தொழில், பல்வேறு பிரச்னைகளில் சிக்கியிருப்பதாகவும் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழிற்சாலைகள், அரசின் சலுகைகள் கிடைத்தால் மட்டுமே தொழிலை தொடர முடியும் என்றும் தெரிவித்துள்ளன.

கிருஷ்ணகிரி, பர்கூர், அச்சமங்கலம் பகுதிகளின் சிட்கோ வளாகங்களில் பலரும் கிரானைட் தொழிற்சாலைகள் வைத்துள்ளனர். தற்போது அதிகரித்துள்ள மின் கட்டணம், வரி, ஆட்கள் கூலி மற்றும் வங்கி கடன் சிக்கல்களால் கிரானைட் விற்பனை குறைந்து வருவதாக கூறுகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட கிரானைட் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் மகேஷ் கூறியதாவது:

சிறு, குறு தொழில் தொடங்க சிட்கோ பகுதியை தேர்ந்தெடுத்து வருகிறோம்.

சிட்கோவில் நிலம் வாங்கினாலும், பெரும்பாலான தொழிற்பேட்டைகளில், மின் விளக்கு, சாலை, தண்ணீர் வசதி கூட இல்லை. முழு பணத்தையும் கட்டி நிலத்தை வாங்கினாலும், பத்திரம் தருவதில்லை என்பதால் வங்கிகளில் கடன் பெற முடிவதில்லை.

'டிக்' வாயிலாக, வாங்கும் நிலங்களுக்கு, 75 சதவீதம் வரை வங்கி கடன் கொடுத்தனர்.

அதற்கு, 12 சதவீத வட்டி விதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆட்சியில், 6 சதவீத வட்டியாக குறைத்து, மீதமுள்ள, 6 சதவீத வட்டியை, அரசே கட்டி வந்தது.

'தி.மு.க., ஆட்சியில், 12 சதவீத வட்டியையும் கட்டுங்கள். 6 சதவீதத்தை வட்டியாகவும், 6 சதவீத தொகை, அசலில் இருந்தும் கழிக்கப்படும் எனக்கூறிய நிலையில், அதை செயல்படுத்தவில்லை.

கடந்த 2023 முதல், சிட்கோ ஒதுக்கும் நிலத்தில், 51 சதவீதம் கட்டடம் கட்ட வேண்டுமென கூறியுள்ளனர். கிரானைட் தொழிலில், பாலிஷ் செய்வது, கற்கள் அடுக்குவது மற்றும் ஹாலோ பிளாக் உள்ளிட்ட பல்வேறு சிறு, குறு தொழில்களுக்கு பெரும்பாலும் நிலம் காலியாக இருக்க வேண்டும். அதில், கட்டடம் கட்ட சொல்வது சரியல்ல.

மின் கட்டணத்தை குறையுங்கள் என, பலமுறை மனு அளித்தோம். ஆனால், மின் கட்டணம், இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தானில், கிரானைட் பாலிஷ் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி வரும் நிலையில், தமிழகத்தில் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us