/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'சூரிய மின்உற்பத்தி விரைவில் 50 லட்சம் வீடுகளை எட்டும்'
/
'சூரிய மின்உற்பத்தி விரைவில் 50 லட்சம் வீடுகளை எட்டும்'
'சூரிய மின்உற்பத்தி விரைவில் 50 லட்சம் வீடுகளை எட்டும்'
'சூரிய மின்உற்பத்தி விரைவில் 50 லட்சம் வீடுகளை எட்டும்'
ADDED : செப் 12, 2025 11:26 PM

புதுடில்லி:பிரதமரின் சூரிய மின்சக்தி திட்டத்தின் கீழ் நாடு முழுதும், 20 லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார்.
விரைவில் இது, 50 லட்சமாக உயரும் என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
இந்த திட்டத்தின் கீழ், ஒரு கோடி வீடுகளில் சூரிய மின் உற்பத்தி கட்டமைப்பை ஏற்படுத்துவதே அரசின் இலக்கு.
வரும் 2030க்குள் 550 ஜிகாவாட், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை எட்ட, அரசு முழுவீச்சில் செயல்படுகிறது. தற்போது 251 ஜிகா வாட் எட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.