'ஸ்டீல் உற்பத்தி திறன் பயன்பாடு 90 சதவீதத்தை தாண்டும்'
'ஸ்டீல் உற்பத்தி திறன் பயன்பாடு 90 சதவீதத்தை தாண்டும்'
ADDED : ஜூன் 18, 2026 05:52 AM

புதுடில்லி: நாட்டில் ஸ்டீலுக்கான தேவை வலுவாக இருப்பதால், ஸ்டீல் உற்பத்தி திறன் பயன்பாடு 90 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் ஸ்டீல் தேவை, கடந்த மே மாதத்தில் 9 சதவீத ஆண்டு வளர்ச்சியை எட்டியுள்ளது. மேலும், நடப்பு 2025 - 26 நிதியாண்டின் இதுவரையிலான காலகட்டத்தில் 8.70 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்த இத்துறை, கடந்த நிதியாண்டில் 7.60 சதவீத வளர்ச்சியை அடைந்து இருந்தது.
இதன் தொடர்ச்சியாகவே, நடுத்தர காலத்தில் உற்பத்தி திறன் பயன்பாடு 90 சதவீதத்துக்கு மேல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டீல் ஏற்றுமதி 30 சதவீத ஆண்டு வளர்ச்சியை சந்தித்து 5 லட்சம் டன்களாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
