/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பங்கு சந்தை நிலவரம்:சட்டென்று மாறிய சந்தை நிலவரம்
/
பங்கு சந்தை நிலவரம்:சட்டென்று மாறிய சந்தை நிலவரம்
ADDED : மே 31, 2025 01:18 AM

இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான நிப்டி,
சென்செக்ஸ் நேற்று சரிவுடன் நிறைவு செய்தன. அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு நேற்று முன்தினம் அந்நாட்டு நீதிமன்றம் விதித்த தடை, தற்காலிகமாக நீக்கப்பட்டதன் காரணமாக, ஆசிய பங்கு சந்தைகள் சரிவுடன் துவங்கின.
இதன் தொடர்ச்சியாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போதே இந்திய சந்தை குறியீடுகள் சரிவுடன் துவங்கின. தொடர்ந்து, வரி விதிப்பின் பாதகத்தால், உற்சாகமிழந்த முதலீட்டாளர்கள், உலோகம், ஐ.டி., மற்றும் வாகனத்துறை பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ததால், சந்தை மேலும் சரிவை கண்டது.
கடந்த நிதியாண்டுக்கான நாட்டின் ஜி.டி.பி., தரவுகள் வெளியான நிலையில், நேற்றைய வர்த்தகத்தின் இடையே, சென்செக்ஸ் 346.57 புள்ளிகள் வரை சரிவை கண்டது. பின்னர், சற்று உயர்ந்து 182.01 புள்ளிகள் சரிவுடன் முடிவடைந்தது. வாராந்திர அடிப்படையில், இரண்டாவது வாரமாக நிப்டி, சென்செக்ஸ் சரிவுடன் நிறைவடைந்தன
உலக சந்தைகள்
வியாழனன்று அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தன. ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, தென்கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின் ஹாங்சேங், சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் சரிவுடன் நிறைவு செய்தன. ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின.
சரிவுக்கு காரணங்கள்
1 டிரம்பின் வரி விதிப்புக்கு கோர்ட் விதித்த தடை தற்காலிகமாக நீக்கம்
2 முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் சந்தையை அணுகியது
3 உலோகம், ஐ.டி., வாகனத்துறை பங்குகளை அதிகளவில் விற்றது
சரிவு கண்ட பங்குகள்
பஜாஜ் ஆட்டோ 3.10%
ஹிண்டால்கோ 2.51%
எச்.சி.எல்.,டெக் 1.99%
உயர்வு கண்ட பங்குகள்
எட்டர்னல் 4.98%
எஸ்.பி.ஐ., 2.09%
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 6,450 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.44 சதவீதம் அதிகரித்து, 64.43 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா குறைந்து, 85.55 ரூபாயாக இருந்தது.