தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : ஜன 26, 2024 02:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2024 02:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்செக்ஸ்

முந்தைய முடிவு: 71,060.31நேற்றைய முடிவு: 70,700.67மாற்றம்: 359.64 இறக்கம்



நிப்டி

முந்தைய முடிவு : 21,454.00நேற்றைய முடிவு: 21,352.60மாற்றம்: 101.40 இறக்கம்



உற்சாகம் இழந்த சந்தை


 அடுத்த வாரம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், வர்த்தகர்கள், இப்போதே உஷாராக லாப பதிவு செய்துகொள்ளத் துவங்கிவிட்டனர். சர்வதேச அளவிலும் உற்சாகமான செய்திகள் இல்லை. மூன்றாம் காலாண்டு முடிவுகளும் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கவில்லை. கச்சா எண்னெய் விலை உயர்வு, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பிரச்னை என்று எந்த மாற்றமும் இல்லாமல் பிரச்னைகள் அப்படியே தொடரவும் செய்கின்றன. அதனால் காலை முதலே நஷ்டத்தில் இருந்த நமது பங்குச் சந்தைகள் மாலையிலும் நஷ்டத்துடனேயே முடிவடைந்தன
 அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் வேறு, ஜனவரியில் இதுவரை 33 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நமது பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதில், ஜனவரி 24 அன்று மட்டும், 6,934 கோடி ரூபாய்க்கு விற்பனை
 வரும் 2024 -- 25 நிதியாண்டில், நமது நிதிப் பற்றாக்குறை, ஜி.டி.பி.யில் 5.50 சதவீதமாக இருக்கும் என்று எஸ்.பி.ஐ.யின் பொருளாதார ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது இந்தியாவில் முதலீடு செய்து வரும் தனியார் முதலீட்டாளர்கள், வென்ச்சர் கேப்பிடல் பண்டுகள் ஆகியவை, 2023ல் செய்துள்ள முதலீடுகள் குறைந்துள்ளன. இதற்கு முந்தைய ஆண்டும் முதலீடுகள் குறைந்திருந்தன
 இந்த நடப்பு நிதியாண்டில், வங்கிகளின் கடன் கொடுக்கும் விகிதம் 14.90 - 15.30 சதவீதம் அளவுக்கு வளரும் என்று கணித்த சந்தை ஆய்வு நிறுவனமான 'இக்ரா', அடுத்த நிதியாண்டில் இதன் அளவு 12 சதவீதமாகக் குறைந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளது
 பட்ஜெட் பயத்தால் தாக்கப்பட்ட நமது பங்குச் சந்தைகளில், வர்த்தக நேர இறுதியில், மனை வணிக பங்குகளின் குறியீட்டைத் தவிர, இதர துறை சார்ந்த குறியீடுகள் அனைத்தும் நஷ்டத்தில் முடிவடைந்தன. குறிப்பாக, நிதிச் சேவைகள், மருந்துகள், வங்கிகள், தகவல் தொழில்நுட்பம், நுகர்பொருட்கள், சுகாதாரம் சார்ந்த பங்குகள் அதிக அளவில் விழுந்தன.



ஏற்றம் கண்ட பங்குகள்

 பஜாஜ் ஆட்டோ  அதானி போர்ட்ஸ் என்.டி.பி.சி.,  கோல் இந்தியா,  இண்டஸ்இண்ட் வங்கி



இறக்கம் கண்ட பங்குகள்

 டெக் மஹிந்திரா சிப்லா பார்தி ஏர்டெல் எல்.டி.ஐ. மைண்டுட்ரீ  எஸ்.பி.ஐ. லைப் இன்ஷூரன்ஸ்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us