வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம் / பங்கு சந்தை நிலவரம்
/
செய்திகள்
பங்கு வர்த்தகம்
பங்கு சந்தை நிலவரம்
ADDED : பிப் 17, 2024 12:51 AM
முந்தைய முடிவு: 72,050.38நேற்றைய முடிவு: 72,426.64 மாற்றம்: 376.26 ஏற்றம் பச்சை
முந்தைய முடிவு : 21,910.75நேற்றைய முடிவு: 22,040.70மாற்றம்: 129.95 (ஏற்றம்)
தொடர்ந்து நான்காவது வர்த்தக நாளாக, இந்திய பங்கு சந்தைகள் வெற்றி நடை போட்டு வருகின்றன. வாகனம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிறுவன பங்குகள் அதிகளவில் ஏற்றம் கண்டதை அடுத்து, நேற்று இந்திய பங்கு சந்தைகள் உயர்வைக் கண்டன தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 22,000 புள்ளிகளை கடந்து, வர்த்தக இறுதியில் நிலைபெற்றது. இப்பிரிவில், 'எல் அண்டு டி., இன்போசிஸ், மஹிந்திரா' ஆகிய நிறுவன பங்குகள் அதிக லாபத்தை சம்பாதித்தன உலக சந்தைகளின் நிலவரமும் ஆறுதல் தரும் வகையில் இருந்ததால், பங்குச் சந்தைகள் பச்சையில் ஒளிர்ந்தன. ஆசிய சந்தையை பொறுத்தவரை, ஜப்பானின் 'நிக்கி', ஹாங்காங்கின் 'ஹாங் செங்', தென் கொரியாவின் 'கோஸ்பி' ஆகிய சந்தைகள் லாபத்துடன் முடிவுற்றது, இந்திய சந்தைகளுக்கு நல்லதொரு 'பூஸ்ட்' ஆக அமைந்தது. சீன சந்தைகளுக்கு விடுமுறை. அமெரிக்க சந்தைகள் வியாழனன்று நன்றாக வர்த்தகமாயின மஹிந்திரா நிறுவனம், 'போக்ஸ்வேகன்' நிறுவனத்துடன் பேட்டரிக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டதை அடுத்து, அந்நிறுவன பங்குகள் அதிக விலையேற்றத்தைக் கண்டன அன்னிய முதலீட்டாளர்களை பொறுத்தவரை, வியாழனன்று, கிட்டத்தட்ட 3.064 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர் நிப்டி பிரிவில் இடம்பெற்றுள்ள 50 நிறுவனங் களில், 36 நிறுவன பங்குகள் லாபத்துடன் நிறைவடைந்தன. 12 நிறுவன பங்குகள் சரிவைக் கண்டன. இரண்டில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை தொலைதொடர்பு, கப்பல், பெட்ரோகெமிக்கல், வாகனம் போன்ற துறை சார்ந்த பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன அதேசமயம் நுகர்பொருட்கள், சரக்கு கையாளுதல் மின்னணு மின்சாரம் ஆகிய துறை பங்குகள் அதிகம் விற்பனை செய்யப்பட்டன.
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஓ.என்.ஜி.சி., எஸ்.பி.ஐ., பிரிட்டானியா ரிலையன்ஸ்