தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : மார் 07, 2024 01:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2024 01:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிப்டி

முந்தைய முடிவு : 22,356.30நேற்றைய முடிவு: 22,474.05மாற்றம்: 117.75 ஏற்றம் பச்சை



சென்செக்ஸ்

முந்தைய முடிவு: 73,677.13நேற்றைய முடிவு: 74,085.99மாற்றம்: 408.86 ஏற்றம் பச்சை



டுமாறி, பின் தலை நிமிர்ந்தது


 நேற்றைய பங்கு சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிப்டி ஆகிய இரண்டும், புதிய உச்சத்தை எட்டின. வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை பங்குகள் லாபம் ஈட்டியதை தொடர்ந்து, இக்குறியீடுகள் புதிய உச்சத்தை எட்டிப் பிடித்தன. துவக்கத்தில் தள்ளாடிக்கொண்டிருந்த போதிலும், இறுதியில் இழப்புகளை சமாளித்து ஏற்றத்துடன் முடிவடைந்தன
 துவக்கத்தில் சந்தை தள்ளாட்டம் போட்டாலும், மதியத்துக்கு பின் ஐரோப்பிய சந்தைகள் ஏற்றம் கண்டதன் தொடர்ச்சியாக, இந்திய சந்தைகளும் மீட்சி கண்டன
 வர்த்தகத்தின் இடையே, சென்செக்ஸ் இதுவரை இல்லாத உயரமான 74,151 புள்ளிகளை தொட்டது. இதேபோல் நிப்டியும், வர்த்தகத்தின் இடையே 22,497 புள்ளிகளை தொட்டது
 ஆசிய சந்தைகளை பொறுத்தவரை சியோல், டோக்கியோ, ஷாங்காய் ஆகியவை இறக்கத்தை சந்தித்த நிலையில், ஹாங்காங் சந்தை மட்டுமே ஏற்றம் கண்டது
 உள்நாட்டு முதலீட்டாளர்களை பொறுத்தவரை, வர்த்தகத்தின் இரண்டாம் பாதியில் லார்ஜ் கேப் பங்குகளை வாங்கினர். இதுவும் சந்தை உயர்வுக்கு வழிவகுத்தது
 அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், கடந்த செவ்வாயன்று 574 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கினர் என்பதும் சந்தைக்கு சாதகமாக அமைந்தது
 'ஜெ.எம்., பைனான்ஷியல்' நிறுவனத்தின் பங்குகள், 11 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டன. இந்நிறுவனத்தின் மீது ரிசர்வ் வங்கி கட்டுபாடுகளை விதித்ததை அடுத்து, நிறுவன பங்குகள் விலை சரிவைக் கண்டன
 பங்கேற்பு பத்திரங்கள் வாயிலான முதலீடு சற்று சரிவைக் கண்டு, கடந்த ஜனவரியில் 1.43 லட்சம் கோடி ரூபாயாக குறைந்து விட்டது என்ற தரவுகள் வெளியாகின. டிசம்பரில் இது, 1.49 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது
 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 7 பைசா அளவுக்கு உயர்வைக் கண்டு, 82.83 ரூபாயாக அதிகரித்தது.



நிறுவனங்கள் நிலை

(மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை : 23%இறக்கம் கண்டவை : 75%மாற்றம் காணாதவை: 2%



ஏற்றம் கண்ட பங்குகள்

 பஜாஜ் ஆட்டோ கோட்டக் மஹிந்திரா ஆக்ஸிஸ் பேங்க் பார்தி ஏர்டெல் எஸ்.பி.ஐ., லைப் இன்ஷூரன்ஸ்



இறக்கம் கண்ட பங்குகள்

 அதானி என்டர்பிரைசஸ் அல்ட்ராடெக் சிமென்ட் என்.டி.பி.சி., ஓ.என்.ஜி.சி., பி.பி.சி.எல்.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us